உள்ளூர் செய்திகள்
திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி:
திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டையன் பேட்டை தாகூர் தெரு பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ் ( வயது 29)பெயிண்டர்.
இவருக்கு நீண்ட நாட்களாக பெண் பார்க்கும் படலம் நடந்தது. ஆனால் திருமணம் நடைபெறவில்லை.இதற்கிடையே குடிப்பழக்கத்துக்கு ஆளான அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது.
இதற்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார்.இந்தநிலையில் தேவதாசன் இளைய சகோதரர் திருமணம் செய்துள்ளார்.
இதையடுத்து மன உளைச்சலுக்கு ஆளான தேவதாஸ் திருமண ஏக்கத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இதுபற்றி ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.