உள்ளூர் செய்திகள்
.

கிரடிட் கார்டு தொகை உயர்த்துவதாக தொழிலாளியிடம் ரூ.1 லட்சம் மோசடி

Update: 2022-04-16 10:29 GMT
சேலத்தில் கிரடிட் கார்டு தொகை உயர்த்துவதாக தொழிலாளியிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:

சேலம் சூரமங்கலம் ராஜாஜி தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 51). தொழிலாளி.  இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி அவரது கிரெடிட் கார்டு தொகை உயர்த்தி வழங்க இருப்பதாகவும் அதற்குத் தேவையான தகவல்களை தரும்படி கேட்டுள்ளார்.

இதை உண்மை என்று நம்பிய பிரபாகரன் ஓ.டி.பி.  தகவல் முதற்கொண்டு அனைத்தையும் தெரிவித்தார். 

அடுத்த சில வினாடிகளில் பிரபாகரன் கிரெடிட் கார்டில் இருந்து ஒரு தனியார் நிறுவனத்திற்கு பொருட்கள் வாங்கியதாக ரூ.1 லட்சத்து ஆயிரத்து 979 பணம் அபேஸ் செய்யப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் இதுகுறித்து உடனடியாக சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். 

போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News