உள்ளூர் செய்திகள்
காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா கோலாகலம்

காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா கோலாகலம்

Update: 2022-04-16 10:21 GMT
ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, முன்னதாக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார்.
காஞ்சிபுரம்:

பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோவிலில் , சித்ரா பௌர்ணமி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஆந்திரா மாநில அமைச்சர் ரோஜா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

அதிகாலையிலேயே குவிந்த மக்கள் நீண்ட வரிசையில் நின்று நெய்தீபம் ஏற்றி ஸ்ரீகர்ணகி சமேத ஸ்ரீசித்திர குப்தரை வணங்கினர்.

தென்னிந்தியாவிலேயே, சித்ரகுப்தருக்கென்று தனி ஆலயம் காஞ்சிபுரம் நெல்லுக்கார தெருவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமியன்று இக்கோவில் திருவிழா சிறப்பாக நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  சித்ரகுப்தரை  மனமுறுகி தரிசனம் செய்வர்

அந்தவகையில் இந்த ஆண்டும், சித்ரகுப்தர் கோவிலில் சித்ரா பௌர்ணமியையொட்டி ஸ்ரீகர்ணகி சமேத ஸ்ரீசித்திர குப்தருக்கு அதிகாலை சிறப்பு ஹோமம், விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பிறகு வண்ண வண்ண மலர் அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார்.

பிறகு கோவில் அர்ச்சகர்கள் சுவாமிக்கு கற்பூரம் தீபாராதனைகள் காண்பித்தனர். அப்போது திரண்டு இருந்த ஏராளமான பக்தர்கள் மனமுறுகி சுவாமி தரிசனம் செய்தனர்.

சித்ரகுப்தர் கோவிலுக்கு அதிகாலையிலேயே, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா,  கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து  ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை புரிந்து  நீண்ட வரிசையில் நின்று நெய்தீபம் ஏற்றி ஸ்ரீகர்ணகி சமேத ஸ்ரீசித்திர குப்தரை வணங்கிவிட்டு சென்றனர்.

அமைச்சர் ரோஜா:

ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா ஆந்திரா மாநிலத்தில் இருந்து கார் மூலம் இன்று காலை காஞ்சீபுரம் வருகை புரிந்தார். 

சித்ரா பௌர்ணமியையோட்டி

சித்ரகுப்தர் கோவிலுக்கு சென்ற அவர் சித்ரகுப்தரை மனமுறுகி சுவாமி தரிசனம் செய்தார். நடிகை ரோஜாவிற்கு அர்ச்சகர் மாலை அணிவித்து கோவில் பிரசாரத்தை வழங்கினர்.

வீ.வள்ளிநாயகம்:

காஞ்சீபுரம் மாவட்ட கழக பொருளாளர் வக்கீல் வீ. வள்ளிநாயகம் ஏற்பாட்டின் பேரில்,  லட்சக்கணக்கான பக்தர்களுக்கு, சாம்பார் சாதம், அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அப்போது நடிகை ரோஜா பங்கேற்று வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

பிறகு நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது :

சித்ரா பௌர்ணமியையொட்டி 

இன்று சித்ரகுப்தர் கோவிலுக்கு வந்திருந்தேன், சித்ரகுப்தரை  நன்றாக சுவாமி தரிசனம் செய்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

இந்த அன்னதானம் நிகழ்ச்சியில், மாவட்ட கழக பொருளாளர் வீ.வள்ளிநாயகம் அவரது துணைவியார் சுசீலாவள்ளிநாயகம் ஆகியோர் குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்கினார்கள்.இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம்,  பெரிய காஞ்சீபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் வி.பாலாஜி, காஞ்சீபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் குட்டி என்கிற சண்முகானந்தம், அஉள்பட பலர் கலந்து கொண்டனர்.

காமாட்சி அம்மன் கோவில்:

ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, முன்னதாக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார். கருவறையில் உள்ள காமாட்சியம்மனை மனமுறுகி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் குங்குமம் பிரசாதங்களை வழங்கினார்கள்.

பாதுகாப்பு:

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா ஆந்திரா மாநிலத்தில் இருந்து கார் மூலம் இன்று காலை காஞ்சிபுரம் வருகை புரிந்தார். 

சித்ரா பௌர்ணமியையோட்டி சித்ரகுப்தர் கோவிலுக்கு சென்ற அவர் சித்ரகுப்தரை மனமுறுகி சுவாமி தரிசனம் செய்தார். நடிகை ரோஜாவிற்கு அர்ச்சகர் மாலை அணிவித்து கோவில் பிரசாரத்தை வழங்கினர்.

வீ.வள்ளிநாயகம்:

காஞ்சிபுரம் மாவட்ட கழக பொருளாளர் வக்கீல் வீ. வள்ளிநாயகம் ஏற்பாட்டின் பேரில்,  லட்சக்கணக்கான பக்தர்களுக்கு, சாம்பார் சாதம், அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அப்போது நடிகை ரோஜா பங்கேற்று வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

பிறகு நடிகை ரோஜா நிருபர்களிடம் கூறியதாவது :

சித்ரா பௌர்ணமியையொட்டி இன்று சித்ரகுப்தர் கோவிலுக்கு வந்திருந்தேன், சித்ரகுப்தரை  நன்றாக சுவாமி தரிசனம் செய்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

இந்த அன்னதானம் நிகழ்ச்சியில், மாவட்ட கழக பொருளாளர் வீ.வள்ளிநாயகம் அவரது துணைவியார் சுசீலாவள்ளிநாயகம் ஆகியோர் குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்கினார்கள்.இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம்,  பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி தலைவர் வி.பாலாஜி, காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் குட்டி என்கிற சண்முகானந்தம், அஉள்பட பலர் கலந்து கொண்டனர்.

காமாட்சி அம்மன் கோவில்:

ஆந்திரா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா, முன்னதாக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு சென்றார். கருவறையில் உள்ள காமாட்சியம்மனை மனமுறுகி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் குங்குமம் பிரசாதங்களை வழங்கினார்கள்.

பாதுகாப்பு:

காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Tags:    

Similar News