உள்ளூர் செய்திகள்
மஞ்சப்பைகள்

விழுப்புரத்தில் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம்

Update: 2022-04-16 10:17 GMT
விழுப்புரத்தில் சமூகநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
விழுப்புரம்:

விழுப்புரத்தில் சமூகநல அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இப்பிரசாரத்திற்கு கூட்டமைப்பின் செயலாளர் பாபுசெல்வதுரை தலைமை தாங்கினார். இயன்றதை செய்வோம் அமைப்பின் நிர்வாகிகள் நத்தர்ஷா, சையத், காவல்துறை சிறுவர், சிறுமியர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் செல்வராஜ், ஆனந்த், பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு மஞ்சப்பை விழிப்புணர்வு பிரசாரத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மஞ்சப்பைகளை வழங்கி பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சப்பைகளை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் காவலர் வாய்ஸ் அமைப்பின் நிர்வாகி லட்சுமிநாராயணன், டிசம்பர் 3 இயக்கம் மாநில பொதுச்செயலாளர் அண்ணாமலை, புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மாவட்ட பொருளாளர் மாரிமுத்து, அரசு குழந்தைகள் இல்ல ஆலோசகர் ஸ்டாலின், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் செல்லையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News