உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சாதி வாரிய கணக்கெடுப்பு - அரசாணையை ரத்து செய்ய வேண்டுகோள்

Published On 2022-04-16 15:46 IST   |   Update On 2022-04-16 15:46:00 IST
அரசியலமைப்பு சட்டத்தில் சாதி ஒழிப்பு என்ற கோட்பாடின்றி, அனைவரும் சட்டத்தின் முன்பு சமம் எனக் கொண்டுள்ளது.
திருப்பூர்:

சாதி வாரிய கணக்கெடுப்புக்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவிநாசியை சேர்ந்த வக்கீல் ப.விஜய் ஆனந்த், தலைமை செயலருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த 2020 ஜனவரி 21-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணை (எண் . 99 / 2020) அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக உள்ளது. சமூக அமைதியை குலைத்து, சிறுபான்மை, இதர சாதியினர் ஆகியோரை பெருமபான்மை சாதியினர் அடக்கி ஒடுக்கும் நிலை ஏற்படும் என்பதால், அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

அரசியலமைப்பு சட்டத்தில் சாதி ஒழிப்பு என்ற கோட்பாடின்றி, அனைவரும் சட்டத்தின் முன்பு சமம் எனக் கொண்டுள்ளது. அதே சமயம் சாதியையோ, மதத்தையோ எந்த இடத்திலும் ஊக்குவிக்கவில்லை. சாதி வாரியான கணக்கெடுப்பு விபரங்கள் வெளிப்பட்டால், சிறுபான்மை மக்களை கண்டும்காணாத போக்கு, வாக்கு வங்கி அரசியலில் தவிர்க்க இயலாததாகி விடும்.

அரசியலமைப்பு சட்டத்தின் பல்வேறு கூறுகளுக்கு இந்த அரசாணை எதிராக உள்ளது. ஆகவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் உரிய சட்ட போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News