உள்ளூர் செய்திகள்
நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகள்.

திருப்பூர் விவசாயிகளுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

Update: 2022-04-16 10:04 GMT
நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி பேசினார்.
திருப்பூர்:

விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அதனை காண தாராபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.   

நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தாராபுரம் ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.வி., செந்தில்குமார், தாராபுரம் நகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.தனசேகர், தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வராஜ் உள்பட கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி பேசினார். வெள்ளகோவில் பாலாஜி திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுடன் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றார். 
Tags:    

Similar News