உள்ளூர் செய்திகள்
சந்தையில் விற்கனைக்கு வந்த வெள்ளரிக்காய்.

காவல்கிணறு சந்தையில் வெள்ளரிக்காய் விலை உயர்வு

Update: 2022-04-16 09:53 GMT
காவல்கிணறு சந்தையில் வெள்ளரிக்காய் விலை அதிகரித்து காணப்பட்டது.
வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் தனியார் தினசரி சந்தை அமைந்துள்ளது.

 இந்த சந்தையில் இந்த பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் ஏலம் விடுவது வழக்கம்.

 கடந்த வாரம் வரை வெள்ளரிக்காய்  விலை ஆயிரம் ரூபாயாக இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரு மூடை வெள்ளரிக்காய் அதிகபட்சமாக ரூ.2,000 வரை விலை போனது.

இதனால் கடந்த வாரம் 1 கிலோ 20 ரூபாயாக இருந்த வெள்ளரிக்காய் இன்று 50ரூபாயாக விலை உயர்ந்தது.
Tags:    

Similar News