உள்ளூர் செய்திகள்
சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் செல்லும் சமூக ஆர்வலர்
சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணம் செல்லும் சமூக ஆர்வலருக்கு கோவில்பட்டியில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கோவில்பட்டி:
பெங்களூரை சேர்ந்த அஜித் குமார் என்பவர் சுற்றுப்புற சூழல், பூமி வெப்பமயமாதலை கருத்தில்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபயணமாக செல்கிறார்.
சென்ற வாரம் கன்னியாகுமரியில் இருந்து கிளம்பிய அவர் கோவில்பட்டி வழியாக செல்கிறார். அவரை வரவேற்க தூத்துக்குடி மாவட்ட டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற துணைத் தலைவரும் பொறியாளரும் ஆன தவமணி தலைமையில் வேலாயுதபுரம் 5-வது வார்டு கவுன்சிலர் லவராஜா, ராஜரத்தினம், மன்ற தலைவர் முருகன், மன்ற ஆலோசகர் துர்கேஸ்வரி, நாகராஜன் சதீஷ் ஆனந்த் பாஸ்கரன் மற்றும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.