உள்ளூர் செய்திகள்
ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Update: 2022-04-16 09:31 GMT
பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கே.டி.சி. நகரில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து பாளை வடக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கே.டி.சி. நகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

இதில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மாநகர் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன், கிழக்கு மாவட்ட மகளிரணி தலைவி அமுதா கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, வட்டார, நகராட்சி, பேரூராட்சிகளை சேர்ந்த திரளானவர்கள் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக கே.டி.சி. நகர் காமாட்சி அம்மன் கோவில் ஆட்டோ நிறுத்தம் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News