உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஈஸ்டர் பண்டிகை: முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து

Update: 2022-04-16 09:01 GMT
ஈஸ்டர் பண்டிகையையொட்டி முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி

நாளை ஈஸ்டர் பண்டிகையையொட்டி புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு அன்பையும், அமைதியையும், இளைப்பாறுதலையும் வழங்கும் கருணா மூர்த்தியாகிய ஏசுபிரான்  மீண்டும் உயிர்த்தெழுந்த மகிமையை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவ மக்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

ஏசுபிரான் போதனைகள் மனிதகுலத்துக்கு வழிகாட்டு-கிறது. கடும் துன்பம், துயரங்கள், சோதனை-களை கடந்து புதிய ஒளிப்பிர-வாகமாக  இயேசு உயிர்த்தெழுந்த புனிதநாள். இந்தநாள் நமக்கு உறுதி, நம்பிக்கை, புது வாழ்வை தரட்டும். அவர் போதித்த கருணை, இரக்கம் நம்  அனைவரின் நெஞ்சங்களிலும் நிலை கொள்ளட்டும். 
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதுவை மாநில தி.மு.க.அமைப்பாளரும், எதிர்கட்சித்தலைவருமான சிவா வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

புதுவை மக்கள்  அனைவருக்கும் இனிய ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்கள். ஈஸ்டர் என்பது ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா என கொண்டாடப்படுகிறது.  

ஏசு கிறிஸ்து  சிலுவையில் அறைந்து அடக்கம் செய்யப்பட்டு 3&ம் நாள் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் விதமாக  கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஈஸ்டர் ஆகும். இது கிறிஸ்தவ வழிபாட்டில் மிக முக்கியமான திருநாளாகும். 

கிறிஸ்துவின்  கருணையும், இரக்கமும் மக்கள் அனை-வரின்  உள்ளங்களிலும், இல்லங்களிலும் தழைத்தோங்கட்டும். ஈஸ்டர் பெருவிழாவை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

இவ்வாறு  அவர் தெரிவித்துள்ளார்.

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க தேர்தல் பிரிவு செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் வாழும் கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் ஈஸ்டர் எனப்படும் புனிதரின் உயிர்ப்பு நாள்  வாழ்த்துக்கள். 

ஏசு மீண்டும் உயிர்த்-தெழுந்து விண்ணுலகம் சென்ற  நாள் ஈஸ்டர் எனப்படும் உயிர்ப்பு திருநாளாக கொண்டாடப்படுகிறது. புதுவை மாநில மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் போக்கி, பாவங்களிலிருந்து விடுவித்து, ஏசு பிரான் நம்மை காத்து நல்வழி  காட்டுவார் என நம்பிக்கை கொள்வோம். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News