உள்ளூர் செய்திகள்
புதுவை-கடலூர் சாலையில் கிருமாம்பாக்கத்தில் நடுரோட்டில் ஏற்பட்ட பள்ளத்தில் சமாதி போன்று மண்ணை கொட்டி அதில் தென்

சாலையில் சமாதி கட்டிய பொதுமக்கள்

Update: 2022-04-16 08:50 GMT
புதுவை-கடலூர் சாலையில் தொடரும் விபத்தால் சேதமான இடத்தில் பொதுமக்கள் சமாதி கட்டினர்.
புதுச்சேரி:

புதுவை-கடலூர் சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலை. இந்த சாலை வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. 

இந்த சாலை முறையாக பராமரிக்கப்படாமல் விடப்பட்டுள்ளதால், சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக, முள்ளோடை முதல் அரியாங்குப்பம்  வரையிலான சாலை பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருவது தொடர் கதையாக உள்ளது. 

கன்னியக்கோவில் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட, தமிழக அரசு பஸ், டிப்பர் லாரி சாலையின் நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. 

ஆனாலும், விபத்துக்களை தடுத்திட போக்குவரத்து-துறையும், போக்குவரத்து போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இந்த ஒரு நிலையில், கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி அருகே சாலையின் நடுவே மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனை சரிசெய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. இதேபோல் மோட்டார் சைக்கிளில்  சென்ற 2 பேர் தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். 

இந்த நிலையில்  யாரோ, அந்த சாலை பள்ளத்தால் மீண்டும் விபத்து நடைபெறாமல் தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, மேலும் சாலையை சரிசெய்ய வலியுறுத்தி பிணத்தை புதைத்து மண்னை கொட்டி தென்னை கீற்றை கொண்டு அதில் சொருகி  சமாதி அமைத்துவிட்டு சென்றுள்ளனர். 

அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர், அதனை  புகைப்படம் எடுத்து சமூக வலை தளத்தில் பகிர்ந்துள்ளனர். 

அது தற்போது வைரலாக பரவி வருவதால், சாலை விபத்துக்களை தடுக்கவும், குறைக்கவும் போதுமான நடவடிக்கையை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News