உள்ளூர் செய்திகள்
தோட்டத்தில் பிடிபட்ட மலைப்பாம்பு.

விவசாய தோட்டத்தில் தஞ்சம் புகுந்த மலைப்பாம்பு மீட்பு

Update: 2022-04-16 08:13 GMT
கொல்லிமலை அடிவாரம் விவசாய தோட்டத்தில் தஞ்சம் புகுந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது.
கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி நாட்டாமை சந்திரன்(வயது 46) என்பவரது தோட்டத்தில் கிணறு வெட்டப்பட்ட கற்களின் குவியல் உள்ளது.  அதை சந்திரன் மற்றும் தொழிலாளர்கள் சுத்தம் செய்தனர். 

அப்போது சுமார் 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு கற்களின் நடுவே பதுங்கி இருந்தது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த சந்திரன் நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திற்கு தகவல் தெரிவித்தார். 

அவரின் அறிவுறுத்தலின்படி வனசரகர் பெருமாள் தலைமையில் வன காப்பாளர் சரவணப்பெருமாள், வனக்காவலர் பாலச்சந்திரன், கண்ணன், திருப்பதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மலைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். 

பின்பு அந்த பாம்பு கொல்லிமலை காப்புக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது. 
Tags:    

Similar News