உள்ளூர் செய்திகள்
கைது

திருத்தணி அருகே சிறுமியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது

Update: 2022-04-16 06:42 GMT
திருத்தணி அருகே சிறுமியை கடத்தி சென்ற வழக்கில் கிருஷ்ண மூர்த்தியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருத்தணி:

திருத்தணியை அடுத்த எஸ்.அக்ராஹாரம் ஊராட்சியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 21). ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியிடம் பழகி வந்துள்ளார்.

கடந்த 12-ந் தேதி பள்ளிக்கு சென்ற தன் மகள் காணவில்லை என திருத்தணி காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த வழக்கு மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் கிருஷ்ண மூர்த்தி, பள்ளிக்கு சென்ற சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரை கடத்தி சென்றது தெரியவந்தது. கடத்தி சென்று 3 நாட்களுக்கு பிறகு கிருஷ்ணமூர்த்தி, சிறுமியுடன் வந்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற வழக்கில் கிருஷ்ண மூர்த்தியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News