உள்ளூர் செய்திகள்
இடமாற்றம்

கைதிகளுக்கு பிரியாணி வினியோகித்ததாக புகார்- ஆத்தூர் ஜெயில் அதிகாரி உள்பட 7 பேர் இடமாற்றம்

Published On 2022-04-16 04:39 GMT   |   Update On 2022-04-16 04:39 GMT
கைதிகளுக்கு பிரியாணி வினியோகித்ததாக எழுந்த புகாரையடுத்து ஆத்தூர் ஜெயில் அதிகாரி உள்பட 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆத்தூர்:

சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் ஆத்தூர் மாவட்ட சிறையில் கடந்த பிப்ரவரி மாதம் ஆய்வு செய்தார். அப்போது அரிசி, மளிகை பொருட்கள் அங்கு இருந்ததை கண்டுபிடித்தார்.

கடந்த மாதம் சேலத்தை சேர்ந்த சில ரவுடிகளை அங்கு அடைத்து வைத்தபோது சிறையின் வெளிப்பகுதியில் இருந்து கயிறு மூலமாக பிரியாணி, சிக்கன் வறுவல், மதுபாட்டில்களையும் சிலர் அனுப்பினர்.

இதுகுறித்து ஆத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரித்தபோது சில கைதிகளுக்கு சிறைத்துறை அலுவலர், போலீசார் சலுகை காட்டியதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆத்தூர் மாவட்ட சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அவர் பாளையங்கோட்டைக்கு மாற்றப்பட்டார்.

மேலும் தலைமை வார்டன்களான சுந்தராஜன் வேலூருக்கும், ராமலிங்கம் கடலூருக்கும், ஏட்டுகள் அசோக்குமார் வேலூருக்கும், செந்தில்குமார் கடலூருக்கும், வார்டன்கள் மாரியப்பன் கடலூருக்கும், ஜெயசீலன் வேலூருக்கும் இடம் மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை சேலம் மத்தியசிறை எஸ்.பி. கிருஷ்ணகுமார் பிறப்பித்துள்ளார்.
Tags:    

Similar News