உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

Update: 2022-04-15 10:04 GMT
கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பெரம்பலூர்:

தமிழ் புத்தாண்டையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்,

செட்டிகுளம் பாலதண்டாயுதபாணி கோவில், பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவில், பிரம்மபுரீஸ்வரர் கோவில், எளம்பலூர் சாலை பாலமுருகன் கோவில், வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில்,

வெங்கனூர் விருத்தாசலஸ்வரர் கோவில், எஸ். ஆடுதுறை குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவில் உள்பட அனைத்து கோவில்களில் சுவாமிகள் அபிஷேகங்கள் செய்யப்பட்டு  அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News