உள்ளூர் செய்திகள்
உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆலோசனை கூட்டம்.

மயிலாடுதுறையில் 19-ந் தேதி காத்திருப்பு போராட்டம்

Published On 2022-04-15 15:19 IST   |   Update On 2022-04-15 15:19:00 IST
காலமுறை ஊதியம் வழங்ககோரி மயிலாடுதுறையில் 19-ந் தேதி காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக ஊரக உள்ளாட்சிதுறை ஊழியர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயிலில் ஊரக உள்ளாட்சிதுறை ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் ஒ.ஹெஜ். ஆப்ரேட்டர்கள், தூய்மை பணி காவலர்கள், துப்புரவு பணியாளர்கள்

ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு செல்வம் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் வில்சன், செயலாளர் மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது தூய்மை பணி

 காவலர், துப்புறவு பணியாளர்கள், ஒ.ஹெஜ். ஆப்ரேட்டர், ஆகியோருக்கு பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவேண்டும், ஓய்வு பெறுபவர்களுக்கு தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தி

 தரவேண்டும், பணி பதிவேடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 19- ந்தேதி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்தி-ருப்பு 

போராட்டம் நடத்தபட உள்ளது. அதில் ஆயிரத்துக்கு மேல் உறுப்பினர்கள் கலந்துக்-கொள்ள வேண்டும் என ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முடிவில் வனராயன் நன்றி கூறினார்.

Similar News