உள்ளூர் செய்திகள்
தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பவானி சங்கமேஸ்வரர் கோவில் தேர்திருவிழா

Update: 2022-04-15 07:20 GMT
Erode News Bhavani Sangameshwarar Temple Election Festival,பவானி சங்கமேஸ்வரர் கோவில் தேர்திருவிழா
பவானி சங்கமேஸ்வரர் கோவில் தேர்திருவிழா

பவானி:

பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி இன்று காலை ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம் நடந்தது.

பவானி சங்கமேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி சுவாமிக்கு தினமும் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

விழாவையொட்டி இன்று காலை ஆதிகேசவ பெருமாள் தேரோட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்த னர். தேர் நகரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக  சென்று மீண்டும் பவானி கூடுதுறையை வந்தடைந்தது.

முன்னதாக இன்று அதி காலை ஆதிகேசவபெருமாள் உடனமர் ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை ஆதிகேசவபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News