உள்ளூர் செய்திகள்
அம்பேத்கர் சிலை அமைக்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் பூமி பூஜை செய்து தொ

அம்பேத்கருக்கு முழு உருவ வெண்கல சிலை ரங்கசாமி அடிக்கல் நாட்டினார்

Update: 2022-04-15 04:00 GMT
அபிஷேகபாக்கத்தில் ரூ.39 லட்சம் செலவில் அம்பேத்கருக்கு முழு உருவ வெண்கல சிலையை ரங்கசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:

மணவெளி தொகுதி அபிஷேகபாக்கத்தில் அம்பேத்கரின் 131வது பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள பழமையான அம்பேத்கர் சிலைக்கு முதல்அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து புதுவை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும். பாட்கோ சார்பில் ரூ.39 லட்சம் மதிப்பில் அம்பேத்கர் முழு உருவ வெண்கல சிலை மற்றும் மண்டபம் அமைப்பதற்கு முதல்அமைச்சர் ரங்கசாமி மற்றும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் அரசு துறை செயலர் உதயகுமார், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் யஷ்வந்தையா, ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் தயாளன், செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், பொது மேலாளர் ஆறுமுகம், இளநிலை பொறியாளர் ஜெயமுகுந்தன், முன்னாள் மகளிர் ஆணைய தலைவி வைஜெயந்தி மற்றும் அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் ராமு, கிருஷ்ணமூர்த்தி, மனோகர், மாயகிருஷ்ணன், வீரப்பன், ஜானகிராமன், கதிரேசன், சக்திவேல், ஹேமாமாலினி, ரமேஷ், உமாகாந்தாரி மற்றும் ன பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News