உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அமைப்பினர்.

பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-14 10:08 GMT   |   Update On 2022-04-14 10:08 GMT
நாகையில் பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:

நாகை கலெக்டர் அலுவலகம் எதிரில் தனியார் கல்வி நிலையங்களில் கல்வி கட்டணக் கொள்ளையைக் கண்டித்தும், கல்வி கட்டணம் கட்டாத மாணவ- மாணவிகள் மீது அடக்குமுறையை ஏவி

இடையூறு செய்து தற்கொலைக்கு தூண்டும் தனியார் கல்வி நிறுவனங்களை அரசுடமையாக்க கோரியும், மாணவி தற்கொலை செய்துகொள்ள காரணமான கல்வி நிறுவனத்திடமிருந்து

ரூ.2 கோடி இழப்பீடு பெற்று அவரது குடும்பத்திற்கு வழங்க கோரியும் இந்த மக்கள் கட்சி நகர தலைவர் பிரதீப் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து வளர்ச்சி

கழக மாநில பொருளாளர் சுரேஷ், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் விஜ-யேந்திர சுவாமிகள், இந்து மக்கள் கட்சி ஒன்றியபொதுச் செயலாளர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்து மகா சபா மாவட்ட தலைவர் விவேக் வரவேற்புரையாற்றினார். அகில பாரத இந்து வளர்ச்சி கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் பரவை சோமசுந்தரம், அகில பாரத இந்து மகா சபா

மாநில செயலாளர் கோவை கார்த்திகேயன்,இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், சிவசேனா கட்சி தஞ்சாவூர் கோட்ட பொறுப்பாளர் குட்டி சிவகுமார் ஆகியோர் கோரிக்கைகளை

வலியுறுத்தி பேசினர். முடிவில் அகில பாரத இந்து மகா சபா ஒன்றிய செயலாளர் செந்தில்-குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News