உள்ளூர் செய்திகள்
திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

40 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கல்யாண உற்சவம்

Published On 2022-04-14 15:35 IST   |   Update On 2022-04-14 15:35:00 IST
வலிவலம் இருதய கமலநாதசுவாமி கோவிலில் 40 ஆண்டுக்கு பிறகு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலத்தில் பிரசித்தி பெற்ற மனத்துணைநாதர் உடனுறை மாழையொண்கண்ணி அம்பிகை, இருதய கமலநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில்

40 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா ஏப்ரல் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வீதிஉலா காட்சி நடைபெற்று

வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிவன்-பார்வதி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.இதனை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாள் மணக்கோலத்தில் வசந்த மண்டபத்திற்கு

எழுந்தருளினார். அங்கு பொதுமக்கள் சீர்வரிசை எடுத்து வரும் நிகழ்வினைதொடர்ந்து, சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.பின்னர் மாலை மாற்றும் வைபவமும் காப்புக்கட்டு வைபவமும் நடைபெற்றது. 

அதனை தொடர்ந்து மகா பூர்ணாஹுதி நடைபெற்றது. அம்பாளுக்கு திருமாங்கல்யம் சாத்தப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா ஏப்ரல் 16ஆம் தேதி நடைபெறுகிறது.

Similar News