உள்ளூர் செய்திகள்
பொதுப்பணி துறை பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
பெருந்துறை அருகே பழுதடைந்த சாலையை பணியாளர்கள் மூலம் சரி செய்து கொண்டிருந்த பொதுப்பணி துறை அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே பழுதடைந்த சாலையை பணியாளர்கள் மூலம் சரி செய்து கொண்டிருந்த பொதுப்பணி துறை அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு சூரம்பட்டி வலசு காந்திஜி ரோடு பகுதியை சேர்ந்தவர் நேரு. இவரது மனைவி மீனாட்சி (வயது 51). இவர் பொதுப்பணி துறையில் சாலை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று மீனாட்சி பெருந்துறை, வெள்ளோடு ரோட்டில் பெருந்துறை ஆர்.எஸ்.பாலம் அருகே சாலை பழுதடைந்து இருந்ததை பணியாளர்கள் மூலம் சரி செய்து கொண்டிருந்தார்.
அப்பொழுது பெருந்-துறை ஆர்.எஸ். கோரகாட்டுவலசு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (57) என்பவர் அந்த இடத்திற்கு வந்தார்.
பின்னர் அங்கு பணி செய்த சாலை ஆய்வாளர் மீனாட்சி மற்றும் ஊழியர்களை பார்த்து தகாத வார்த்தைகளால் பேசி கல்லை எடுத்து மீனாட்சியின் மீது வீசியுள்ளார். பின்னர் அவரின் கையை பிடித்து இழுத்து இங்கிருந்து ஓடி விடு என மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக மீனாட்சி வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப் பதிவு செய்த ரவிச்சந்திரனை கைது செய்தனர்.
பின்னர் ஈரோடு மகிளா நீதிமன்-றத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறை சிறையில் ரவிச்சந்திரன் அடைக்கப்பட்டார்.