உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

ரூ. 13 லட்சம் மதிப்பில் நெகிழியை பயன்படுத்தி சாலை

Published On 2022-04-14 15:02 IST   |   Update On 2022-04-14 15:02:00 IST
ரூ. 13.08 லட்சம் மதிப்பீட்டில் நெகிழியை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சாலை பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் ரூ. 13.08 லட்சம் மதிப்பீட்டில் நெகிழியை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சாலை பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், வேப்பந்தட்டை ஒன்றியம், தேவையூர் கிராமத்துக்குள்பட்ட மங்களமேடு பகுதியில் நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி நெகிழி கலந்த தார்ச் சாலைகள் ரூ. 13.08 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளதையும்,

ரஞ்சன்குடி- ஆற்காடு செல்லும் தார்ச் சாலை ரூ.10.39 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளதையும், எறையூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகளையும், வேப்பூர் ஒன்றியம்,

வயலப்பாடி கிராமத்தில் வீடு கட்டுமானப் பணிகள் மற்றும் கால்நடை கொட்டகை, ஓலைப்பாடி கிராமத்தில் தையல் தொழிற்சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கூறியதாவது,

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையுடன், தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின்கீழ் ஊரகப் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் நெகிழிகள் சேமிக்கப்படுகின்றன.

காரையில் அமைக்கப்பட்டுள்ள நெகிழி சேமிப்புக் கிடங்கில் சாலை அமைக்க உகந்த நெகிழிகள் தரம் பிரிக்கப்பட்டு, அவற்றை பயன்படுத்தி வேப்பந்தட்டை ஒன்றியத்தில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

Similar News