உள்ளூர் செய்திகள்
சிவன் கோவிலில் குருப்பெயர்ச்சி யாகம்.

சிவன் கோவிலில் குருப்பெயர்ச்சி யாகம்

Published On 2022-04-13 17:26 IST   |   Update On 2022-04-13 17:26:00 IST
மானாமதுரை அருகே உள்ள சிவன் கோவிலில் குருப்பெயர்ச்சி யாகம் நாளை நடக்கிறது.
மானாமதுரை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை பரமக்குடி செல்லும் சாலையில் உள்ள வழிவிடுபெரிய நாச்சிஅம்மன் கோவிலில் சித்திரைதிருவிழா நேற்று காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இங்குள்ள காசிசிவன் கோவிலில் நாளை வியாழன் அன்று தமிழ்புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சுபகிருதுவருட பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து காலை 11 மணிக்கு குருபெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகமும் அன்று மாலை பிரதோஷ வழிபாடும், பக்தர்கள் காசி சிவலிங்கத்திற்கு கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபடும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

அதை தொடர்ந்து திருவிளக்கு பூஜை வழி பாடும், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 15ந்தேதி(வெள்ளிக்கிழமை) காலை தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சியும் பால்குடம் ஊர்வலம் பாலாபிஷேகமும்  சிறப்பு அன்னதானம்மும் நடைபெறுகிறது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு வாணவேடிக்கையும் நடைபெறுகிறது.



Similar News