உள்ளூர் செய்திகள்
திருக்கடையூர் அருகேயுள்ள காழியப்பநல்லூரில் தீயணைப்பு நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
தரங்கம்பாடி:
திருக்கடையூர் அருகேயுள்ள காழியப்பநல்லூரில் 47,952 சதுரடியில், ரூ.3 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி-கள் நிலையம் அலுவலர் மற்றும்
பணியாளர்கள் குடியிருப்பு வளாகம், கண்கா-ணிப்பு நிலையம் ஆகிய கட்டிடங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
இந்த திறப்பு விழாவில் தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி உதவி செயற்பொறியாளர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து
மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் வடிவேல், உதவி மாவட்ட அலுவலர் துரை, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணாசங்கரி, திருக்கடையூர்
ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயமாலதி சிவராஜ், பொறையார் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு, நிலைய அலுவலர் மொகிசன், சிறப்பு நிலை அலுவலர் அருண்மொழி, நிலைய அலுவலர்கள்
மயிலாடுதுறை முத்துக்குமார், குத்தாலம் சீனுவாசன், சீர்காழி சிறப்பு நிலைய அலு-வலர் ரத்தினவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.