உள்ளூர் செய்திகள்
விவசாயிகளுக்கு தென்னைமரம் ஏறும் கருவியை வழங்கிய கலெக்டர் அருண்தம்புராஜ்.

27 கடற்கரை கிராமங்களுக்கு 5000 தென்னை கன்றுகள் - கலெக்டர் தகவல்

Published On 2022-04-13 14:49 IST   |   Update On 2022-04-13 14:49:00 IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 27 கடற்கரை கிராமங்களுக்கு 5000 தென்னை கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் அருண் தம்புராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய-த்தில் ஆத்மா திட்டத்தின் கீழ் மீன் வளர்ப்புடன் கூடிய ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த விவசாயிகள் ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், வேளாண் துறை இணை இயக்குனர் அக்கண்டராவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் மீன் வளர்ப்புடன் கூடிய தேனீ வளர்த்தல், 

தென்னை, நெல் சாகுபடி இணைந்த வருவாய்பெருக்கக் கூடிய ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து விவசாயிகளுக்கு நேரடியாக செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து

மீன்குஞ்சுகளை ஒருங்கிணைந்த பண்ணையத்தில் விட்டு கலெக்டர் தொடங்கி வைத்தார். மேலும் விவசாயிகளுக்கான இடுபொருட்கள் எந்திரங்களையும் வழங்கினார்.கஜா புயலால் 27 கடற்கரை

 கிராமங்களில் சேதமடைந்த தென்னை வளர்ப்பை ஊக்கப்படுத்துவதற்காக 5 ஆயிரம் தென்னை கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ-தாகவும், நாகை மாவட்டத்தில்

 80 கிராமங்களில் வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.

Similar News