உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை மதுபான கடைகளுக்கு விடுமுறை

Published On 2022-04-13 12:17 IST   |   Update On 2022-04-13 12:17:00 IST
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை 14 ந்தேதி மதுபான விற்பனை கடைகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர்:

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை 14 ந்தேதி  வியாழக்கிழமை அன்று அனைத்து வகையான மதுபான விற்பனைக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்  ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் டாஸ்மாக் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும்  

எப்எல் 3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்திற்கும் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நாளை 14ந் தேதி (வியாழக்கிழமை) ஒருநாள் விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது.

மகாவீர் ஜெயந்தி தினத்தன்று மேற்படி மதுக்கடைகள் செயல்படாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News