உள்ளூர் செய்திகள்
பால்குடம் எடுத்து பெண்கள் வழிபாடு.

உலக நன்மை வேண்டி பால்குடம் எடுத்த பெண்கள்

Published On 2022-04-12 13:48 IST   |   Update On 2022-04-12 13:48:00 IST
வேதாரண்யத்தில் உலக நன்மை வேண்டி பால்குடம் எடுத்து பெண்கள் வழிபட்டனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே அகஸ்தியன் பள்ளியில் அமைந்துள்ள பக்தர்குளம் மாரியம்மன் கோவிலின் 55-ம் ஆண்டு கோடைத் தீர்த்த திருவிழா நடைப்பெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சார்ந்த 300 -க்கும்

மேற்பட்ட பெண்கள் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து உலக நன்மை வேண்டி பால் குடம் எடுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக நடந்து சென்று 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்தர்குளம்

மாரியம்மன் கோவிலை அடைந்தனர். பின்பு அம்மனுகு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News