உள்ளூர் செய்திகள்
சென்னிமலை போலீசார் சார்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சென்னிமலையில் போலீசார் சார்பில் மாணவர்களுக்கு வழிப்புணர்வு

Published On 2022-04-12 12:56 IST   |   Update On 2022-04-12 12:56:00 IST
சென்னிமலை போலீசார் சார்பில் மாணவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
சென்னிமலை:

சென்னிமலை போலீசார் சார்பில் மாணவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை குறித்து விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

சென்னிமலை போலீசார் சார்பில் குமரன் சதுக்கம் பகுதியில் சாலை விதிகளை கடைப்பிடித்தல் மற்றும் ஆம்புலன்ஸ் முதல் உதவி சிகிச்சை குறித்த பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சென்னிமலை டவுன் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்&இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் ஆகியோர் சாலை விதிகள் குறித்த விளம்பரப் பலகை வைத்து அதில் உள்ள குறியீடுகளை மாணவ, மாணவிகளுக்கும், ஆட்டோ ஓட்டுநர்கள், பொது மக்களுக்கும் விளக்கி காட்டினர்.

 மேலும் சென்னி-மலை பாஸ் ஆம்புலன்ஸ் வர-வழைக்-கப்-பட்டு அதிலுள்ள உபகர-ணங்கள் குறித்தும்  விபத்துக்-குள்ளானவர்-களுக்கு எப்படி முதலுதவி செய்வது பற்றியும் வகுப்புகள் நடத்தப் பட்டது.

இதில் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி, ஆசிரியர்கள் முருகன், ஜெயலட்சுமி, மாணவர்கள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள்  கலந்து கொண்டார்கள்.

Similar News