உள்ளூர் செய்திகள்
கிருமாம்பாக்கத்தில் பெய்த திடீர் மழையால் மாணவர்கள் அவதியடைந்தனர்.
புதுச்சேரி:
பாகூர், கிருமாம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் கடந்த 3 நாட்களாக திடீர் மழை அவ்வப்போது பெய்துவருகிறது.
இதனால் பொதுமக்கள் இரவு வெப்ப காற்றில் இருந்து மீண்டு குளிர்ந்த காற்றை உணர்ந்து சற்று நிம்மதியாக தூங்குகின்றனர்.
இந்த நிலையில் 6 மணிக்கு கிருமாம்பாக்கம் பகுதியில் திடீர் மழை பெய்தது. 9.30 மணி வரை மழை பெய்தது.
இதனால் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் பொது-மக்கள் அவதிக்குள்ளாகினர். திடீர் மழையால் குடை, மழை கோட்டு எடுத்து வராததால் நனைந்தபடியும், பலர் சாலை ஓரத்தில் நீண்ட நேரமாக காத்து கிடந்தனர்.
இந்த மழைக்கு கடலூர்-புதுவை மெயின் ரோடு மற்றும் உள்வீதிகளில் தண்ணீர் தேங்கியது.
குறிப்பாக கிருமாம்பாக்கம் இந்திரா நகர் பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் வெளியேறாமல் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது.
இங்கு உள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்வார படாமல் இருந்து வருவதாக அப்பகுதி புகார் தெரிவித்துள்ளனர்.