உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு விடும் அரசின் முடிவை திரும்ப பெற கோரிக்கை

Published On 2022-04-12 06:03 GMT   |   Update On 2022-04-12 06:03 GMT
பணியாளர்களில் தொழில் நுட்ப கல்வித்திறன் இல்லாத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
உடுமலை:

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 5-வது கோட்ட பேரவை கூட்டம் திருப்பூரில் நடந்தது. 

முன்னதாக சங்க கொடியேற்றப்பட்டு, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கோட்டத்தலைவர் சிவக்குமரன் தலைமை வகித்தார். 

இணைச்செயலாளர் செல்வராஜ், உட்கோட்ட செயலாளர் கருப்பன் முன்னிலை வகித்தனர். 

மாநில துணைத்தலைவர் ராஜ மாணிக்கம், கோட்டச் செயலாளர் ராமன் ஆகியோர் பேசினர். கோட்டப்பொருளாளர் கருப்பன் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார். துணை தலைவர் அம்மாசை, மாநில செயற்குழு உறுப்பினர் மணிவேல் ஆகியோர் தீர்மானஙகள் குறித்து விளக்கினர். 

கூட்டத்தில் சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு விடும் அரசின் முடிவை திரும்ப பெற வேண்டும். பணியாளர்களில் தொழில் நுட்ப கல்வித்திறன் இல்லாத ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News