உள்ளூர் செய்திகள்
பெண்ணை மானபங்கம் செய்து கொலை மிரட்டல்
கருவடிக்குப்பத்தில் பெண்ணை மானபங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை கருவடிக்குப்பம் மேஜர் சரவணன்நகரை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி பூரணி. இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கம் பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் விக்னேசுக்கும் அதே பகுதிகளான ரவுடிகளான கார்த்திக் என்ற பாபாகார்த்திக், அருண் என்ற எள்ளாடை அருண் ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் பாபா கார்த்திக்கை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜெயிலில் இருந்து பாபா கார்த்திக் வெளியே வந்தார். பூரணி மற்றும் அவரது மகன் விக்னேஷ் வீட்டில் இருந்த போது பாபா கார்த்திக், எள்ளாடை அருண் மற்றும் ஒருவர் ஆகிய 3 பேர் அத்துமீறி பூரணியின் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த விக்னேசை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி வெட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.
மேலும் விக்னேசை தாக்க முயன்றனர். இதனை பூரணி தடுக்க முயன்ற போது அவரது சேலையை பிடித்து உருவி மானபங்கம் செய்தனர். மேலும் கத்தியை காட்டி 2 பேரையும் இங்கேயே வெட்டி கொலை செய்து புதைத்து விடுவோம் என்று மிரட்டினர். இதனால் பயந்து போன பூரணி அலறல் சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவே ரவுடிகள் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதுகுறித்து பூரணி லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பாபா கார்த்திக், எள்ளாடை அருண் உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
புதுவை முத்திரையர்பாளையம் காந்திதிருநல்லூர் திருநாவுக்கரசு தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தீபா(31). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலு என்பவருக்கும் நட்பு ரீதியாக பழக்கம் இருந்து வந்தது.
இருவரும் பணம் கொடுக்கல்-வாங்கல் மற்றும் ஒருவருக்கொருவர் உதவி செய்தல் என பழகி வந்தனர்.
இந்த நிலையில் வேலுவின் உறவினர்களான ரபி, சங்கீதா மற்றும் சசி ஆகியோர் தீபாவின் வீட்டுக்கு சென்று அவரிடம் வேலுவிடம் எப்படி பழகலாம் என கேட்டு தகராறு செய்தனர்.
மேலும் விபசார தொழில் செய்வதாக தீபாவை திட்டினர். இதனை தடுக்க முயன்ற தீபாவின் தங்கையான காமாட்சியையும் அவர் கள் தாக்கினர். இனிமேல் வேலுவிடம் தொடர்பு வைத்துக்கொண்டால் கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டி விட்டு அவர்கள் சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த தீபா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.