உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரியில் வெவ்வேறு இடங்களில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
கிருஷ்ணகிரியில் வெவ்வேறு இடங்களில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி டவுன் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது41). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளை அங்குள்ள போட்டோ ஸ்டுடியோ முன்பு நிறுத்தியுள்ளார். பின்னர் வந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிள் காணவில்லை.
இதேபோல் திருவள்ளுவர் நகரை சேர்ந்த மணி (27) என்பவர் லாட்ஜி முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். பின்னர் வந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிள் காணவில்லை.
இது குறித்து இவர்கள் இருவரும் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (28). மெக்கானிக் கான இவர் தனது மோட்டார் சைக்கிளை டிராவல்ஸ் ஆபீஸ் முன்பு நிறுத்தியுள்ளார். பின்னர் வந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிள் மாயமானது.
இதேபோல் குருபரபள்ளியை சேர்ந்த பழனி (49) என்பவர் ஏரிக்கரையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். பின்னர் வந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிள் காணவில்லை.
இது குறித்து குருபரபள்ளி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மோட்டார் சைக்கிளை தேடி வருகின்றனர்.