உள்ளூர் செய்திகள்
சூளகிரி கோட்டை தெருவில் உள்ள ஒரு குடியிருப்பில் வீட்டு வாசலில் குரங்குகள் அட்டகாசம் செய்த காட்சி.

தொடர் அட்டகாசம்: குரங்குகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்

Published On 2022-04-11 16:13 IST   |   Update On 2022-04-11 16:13:00 IST
அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூளகிரி,.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சிக்கு உள்பட்ட கோட்டை தெரு, வாணியர் தெரு, கீழ்தெரு, மூஸ்லீம் தெரு, அண்ணா நகர், கமலா காலனி, காமராஜர் நகர்,  ஒசூர் கிருஷ்ணகிரி சாலை, சூளகிரி பேரிகை சாலை மற்றும் பல பகுதிகளில் குரங்கள் அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் குரங்குகள் இன பெருக்கம் அதிகரிப்பால் நாளுக்கு நாள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

இந்த பகுதிகளில் வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டை எப்போதும் பூட்டிய நிலையில் இருக்கும் நிலை ஏற்படுகிறது. வீட்டை திறந்தால் வீட்டுக்குள் நுழைந்து ரகளை செய்வதால் மக்கள் பீதியில் உள்ளனர்.

 வீட்டு தோட்டங்கள் நாசம் செய்து வருவதால் வீட்டு தோட்டம் வாழை, தென்னை, காய்கறிகள் தோட்ட பயிர் செய்ய முடியாமல் அவதிப்படுகிறார்கள். இதனால் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Similar News