உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

இரு தரப்பினர் இடையே மோதல் - 3 பேர் கைது

Published On 2022-04-11 15:26 IST   |   Update On 2022-04-11 15:26:00 IST
திருமருகலில் இரு தரப்பினர் இடையே நடந்த மோதலில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திருமருகல் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் விக்ரம் வளவன் (வயது 21), அதே பகுதியை சேர்ந்த உலகநாதன் மகன் ஐயப்பன் (20), தெட்சணாமூர்த்தி

மகன் தர்மா (20), அருணாச்சலம் மகன் அருண்குமார் (20). அகிய 4 பேரும் மது அருந்தி போதையில் திரும ருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் சட்டை

எடுக்க சென்றுள்ளனர். அங்கு போதையில் கடை ஊழியர்களிடம் 4 பேரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கடைக்-காரர் கடையிலிருந்து வெளியே அனுப்பி உள்ளார். அப்போது

அருகில் கடை வைத்துள்ள திருமருகல் முருகன் கோயில் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மகன் குருமூர்த்தி (33), பில்லாளி தெற்கு தெரு வடிவேலு மகன் சந்திரபோஸ் (28) ஆகிய இருவரும் அவர்களை

சமாதானப்படுத்தி உள்ளனர். அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியதில் கட்டை, சேர் உள்ளிட்ட பொருட்களால் தாக்கிக் கொண்டனர்.

இதில் காயமடைந்த சந்திரபோஸ், குருமூர்த்தி, அருண்குமார் ஆகிய 3 பேரும் நாகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ-மனையில் அனுமதிக்கப்பட்-டுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்ரம் வளவன், ஐயப்பன், தர்மா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும் இதுகுறித்து 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Similar News