உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் பேசிய போது எடுத்த படம்.

அ.தி.மு.க அமைப்பு தேர்தல் ஆலோசனை கூட்டம்

Published On 2022-04-11 15:06 IST   |   Update On 2022-04-11 15:06:00 IST
அ.தி.மு.க அமைப்பு தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
புதுச்சேரி:

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆணைக்கிணங்க, புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க அமைப்புத் தேர்தல் சம்மந்தமான ஆலோசனைக் கூட்டம் தலைமை அலுவலகத்தில்  நடைப்பெற்றது.

 இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கர்,  மாநில இணைச் செயலாளர்கள் கணேசன், அன்பானந்தம், மாநில துணை தலைவர்கள் ராஜாராமன், சின்னதுரை, மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே கருணாநிதி, அன்பழக உடையார், உமா, மூர்த்தி,  ஜெயசேரன், கிருஷ்ணமூர்த்தி, காந்தி, மணவாளன், குமுதன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன், மாநில மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலர் பாப்புசாமி, மாநில மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி, மாநில மாணவர் அணி செயலாளர் பிரதீப், மாநில வக்கீல் பிரிவு செயலாளர் ராமலிங்கம், மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைத் தலைவர் குணாளன்,  உட்பட  அ.தி.மு.க நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

Similar News