உள்ளூர் செய்திகள்
தாய் வீட்டுக்கு சென்ற பெண் மகளுடன் மாயம்
பெருந்துறை அருகே தாய் வீட்டுக்கு சென்ற பெண் மகளுடன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள.
பெருந்துறை
பெருந்துறை அருகே தாய் வீட்டுக்கு சென்ற பெண் மகளுடன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள.
பெருந்துறை அடுத்த காஞ்சி கோவில், தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன் (38). இவரது மனைவி கருணாம் பாள் (33). இவர்களுக்கு துவிஷா (8). என்ற மகள் உள்ளார்.
இந்த நிலையில் சம்பவத் தன்று கருணாம்பாள் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு தனது மகள் துவிஷாவை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். இது குறித்து தனசேகரன் மாமியாரிடம் கூறினார்.
ஆனால் அவர்கள் அங்கு செல்லவில்லை என தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரை அக்கம் பக்கம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தும், விசாரித்தும் அவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து தனசேகரன் காஞ்சிகோவில் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.