உள்ளூர் செய்திகள்
தனியார் பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
தனியார் பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் மனிதவள மேம்பட்டு துறை சார்பாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
வேலைவாய்ப்பு முகாமில் சென்னையை சார்ந்த டி.வி.எஸ். சுந்தரம் பாஸ்ட்னர்ஸ், எஸ்.பி.எல். உட்கட்டமைப்பு நிறுவனம் மற்றும் மதுரையை சார்ந்த சத்யம் பயோ பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் கலந்து கொண்டன.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் டி.வி.எஸ். சுந்தரம் பாஸ்ட்னர்ஸ், எஸ்.பி.எல். உட்கட்டமைப்பு நிறுவனம், சத்யம் பயோ பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு எழுத்துத்தேர்வு, குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடத்தி மாணவர்களை தேர்ந்தெடுத்தனர்.
முகாமில் பயோ மெடிக்கல், மெக்கானிக்கல், சிவில் எலக்ட்ரிகல், எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வேளாண்மை துறையை சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நேர்முகத்தேர்வில் சுமார் 200&க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் முன்னிலையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆண்டு சம்பளமாக நான்கு முதல் ஐந்து லட்சம் வரை வழங்கப்படும் என மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களில் சுமார் என்பது சதவீத மாணவர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணி நியமன ஆணையைப் பெற்று தங்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்து கொண்டனர்.
எஞ்சிய மாணவர்கள் தங்கள் உயர் கல்வியை தொடரவும், தொழில் முனைவோராகவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர், துணை முதல்வர், மற்றும் துறைத்தலைவர்கள் அனைவரும் பாராட்டினார்.