உள்ளூர் செய்திகள்
செண்டை மேளம் முழங்க நடனமாடி பக்தர்களுக்கு அருள்வாக்கு- செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது காட்சி.

புதுச்சேரியில் கேரள மக்களின் விநோத வழிபாடு

Published On 2022-04-11 10:51 IST   |   Update On 2022-04-11 10:51:00 IST
புதுவை லாஸ்பேட்டையில் செண்டை மேளம் முழங்க நடனமாடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கேரள மக்களின் விநோத வழிபாடு நடைபெற்றது.
புதுச்சேரி:

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பரசின்னி கடவு முத்தப்பன் கோவில் உள்ளது.

சிவபெருமானே இங்கு முத்தப்பனாக உள்ளார்.சிவனும் சக்தியும் திருவப்பன், வெள்ளாட்டம் என்னும் 2 வேடங்களை அணிந்து, மாந்திரீக நடனமாடி பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்கின்றனர். கண்ணூர் புதுவை மாநிலம் மாகி பிராந்தியம் அருகில் உள்ளது. இதனால், மாகி மக்களும் முத்தப்பனின் பக்தர்கள்.

உள்ளூர் பாரம்பரியத்-தின்படி புதுவை வாழ் கேரள மக்கள் கடந்த 5 ஆண்டுகளாக முத்தப்பனுக்கு விழா எடுத்து கொண்டாடுகின்றனர். 

லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பூங்காவில் விழா நடந்தது. தமிழ் மக்களின் குல தெய்வ வழிபாடு போல கேரள மக்கள் முத்தப்பன் திருவிழாவை பங்குனி மாதத்தில் நடத்துகின்றனர்.

இறுதி நாளில் திருவப்பன், வெள்ளாட்டம் என்னும் 2 வேடங்களை அணிந்து சிவன், சக்தி பள்ளிவேட்டை ஆடி குதித்து குதித்து பக்தர்-களுக்கு அருள்வாக்கு சொல்-லும்  நிகழ்ச்சி செண்டை மேளம் முழங்க நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற கேரள மக்கள் சாமியிடம் தங்களது கோரிக்கைகளை காதில்  கூறி அருள்வாக்கு பெற்றனர். 

தங்கள் வேண்டுதல் நிறைவேற விழாவில் பக்தர்கள் முத்தப்பனுக்கு தேங்காய், வெற்றிலை, பாக்கு, பச்சைப்பயறு, மீன், கருவாடு போன்றவற்றோடு நீண்ட கத்தி மற்றும்  தென்னங்-கள்ளையும் கொடுத்து வழிபட்டனர்.

Similar News