உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

சார்பதிவாளர் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்-கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2022-04-11 10:47 IST   |   Update On 2022-04-11 10:47:00 IST
சார்பதிவாளர் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:

புதுவை குயவர் பாளையத்தை சேர்ந்தவர் உலகநாதன். இவர் புதுவை பத்திரபதிவு அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வந்தார்.  கடந்த 3-ந் தேதி உலகநாதன்  மயங்கி விழுந்தார். உடனே அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து உலகநாதன் மகன் யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில் உருளையன் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிரேத பரிசோதனையில் உலகநாதனின் கழுத்து எலும்பு உடைந்துள்ளது தெரிய வந்தது.

இதனால் உலகநாதன் மரணத்தில் சந்தேகம் எழுந்தது. அவரது வீட்டின் அருகில் உள்ள கேமிரா பதிவு காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, நில அபகரிப்பு கும்பலால் சார் பதிவாளர் கொலை செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

இதற்கிடையே  உப்பளம் தொகுதி தி.மு.க.எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கூறும் போது, மரணம் அடைந்த சார் பதிவாளர் உலகநாதனின் செல்போனை ஆய்வு செய்து குற்றவாளிகளின் மிரட்டல் கால்களை ஆய்வு செய்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களையும், உடந்தையாக இருந்தவர்களையும் சட்டத்துக்கு முன் கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என கூறி உள்ளார்.

Similar News