உள்ளூர் செய்திகள்
சாய்பாபாவுக்கு 108 கிலோ சர்க்கரை அபிஷேகம் நடைபெற்ற காட்சி.

சாய்பாபாவுக்கு 108 கிலோ சர்க்கரை அபிஷேகம்

Published On 2022-04-11 10:36 IST   |   Update On 2022-04-11 10:36:00 IST
கோரிமேடு அருகே மொராட்டாண்டியில் ஓம் வழிகாட்டும் சாய்பாபாவுக்கு 108 கிலோ சர்க்கரை அபிஷேகம் நடைபெற்றது.
புதுச்சேரி:

புதுவை கோரிமேடு அருகே மொராட்டாண்டியில் ஓம் வழிகாட்டும் சாய்பாபா ஆலயம் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் வாரந்தோறும் வியாழக்-கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் அன்ன-தான நிகழ்ச்சி நடைபெறும். மேலும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

இந்த நிலையில் ராமநவமியையொட்டி வழி காட்டும் சாய்பாபா சிலைக்கு 108 கிலோ  சர்க்கரை அபிஷேகம்  செய்து அதனை எறும்புக்கு தானமாக அளிக்கப்பட்டது.

மேலும் அபிஷேகம் செய்யப்பட்ட சர்க்கரை பக்கதர்களுக்கும் வழங்கப்-பட்டது. இதனைதொடர்ந்து ராமபஜனையும், மாணவி அருவியின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பாபா பிரசாதம் மற்றும் மோர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி சாய்சசி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Similar News