உள்ளூர் செய்திகள்
தற்கொலை முயற்சி

காரைக்கால் டவுன் போலீசாரை கண்டித்து வாலிபர் தீக்குளிக்க முயற்சி

Update: 2022-04-10 10:04 GMT
காரைக்கால் டவுன் போலீசாரை கண்டித்து வாலிபர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்கால்:

காரைக்கால் நித்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் சேது மணி (வயது 24). இவர் காரைக்கால் நகர் பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார்.

இவர் கடந்த சில ஆண்டுகளாக, குற்ற வழக்குகளை மறந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் குற்றவழக்கு ஒன்றிற்காக காரைக்கால் கோர்ட்டில் அவர் ஆஜரானார். அப்போது காரைக்கால் டவுன் போலீசார் சேது மணியை பார்த்ததும், வேறு சில குற்ற வழக்கிற்காக போலீஸ் நிலையத்திற்கு வரும்படி வலியுறுத்தினர். 

இதனால் பயந்து போன சேதுமணி, காரைக்கால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வாயிலில், காரைக்கால் நகர போலீசாரின் செயலை கண்டித்து, தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது பணியில் இருந்த போலீசார் சேதுமணியை தடுத்து காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து காரைக்கால் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News