உள்ளூர் செய்திகள்
அடிப்படை வசதிகள் ஆய்வு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு

Published On 2022-04-10 09:48 GMT   |   Update On 2022-04-10 09:48 GMT
சீர்காழி தென்பாதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நகரசபை தலைவர் ஆய்வு செய்தார்.
சீர்காழி:

சீர்காழி தென்பாதியில் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை என பொதுமக்கள் புகார் செய்தனர்.

அதன்பேரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சீர்காழி நகரசபை தலைவர் துர்கா பரமேஸ்வரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் டாக்டர் கனிமொழியிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
 
அப்போது  கூடுதலாக கழிப்பிட வசதி, சுற்றுச்சுவர், சாக்கடை வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தருமாறு டாக்டர் கோரிக்கை விடுத்தார்
.
இதனைத் தொடர்ந்து சர்வமானிய தெருவில் சேதமடைந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகாலை பார்வையிட்டு, சேதமடைந்த மழைநீர் வடிகாலை சீரமைக்க பணி மேற்பார்வையாளர் பாலசுப்ரமணியனிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது நகரசபை துணை தலைவர் சுப்பராயன், கவுன்சிலர்கள் ராஜசேகரன், வேல்முருகன், ரம்யா தன்ராஜ், ரேணுகாதேவி திருச்செல்வன் உள்பட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News