உள்ளூர் செய்திகள்
விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் அருண் தம்புராஜ், மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன் ஆகியோர் உள

24 படகு உரிமையாளர்களுக்கு 1 கோடியே 13 லட்சத்தில் நிவாரண உதவி

Published On 2022-04-10 13:36 IST   |   Update On 2022-04-10 13:36:00 IST
நாகையில் 24 படகு உரிமையாளர்களுக்கு 1 கோடியே 13 லட்சத்தில் நிவாரண உதவியை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் வழங்கினார்.
நாகப்பட்டினம்:

நாகையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு பழுதான படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழக மீன் வளர்ச்சிக் கழக தலைவரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான கவுதமன் தலைமையிலும் கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையிலும் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதா-கிருஷ்ணன் பங்கேற்று மீனவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 22 விசைப்படகுகளுக்கு தலா ரூ.5 லட்சம், 2 கண்ணாடி இலை படகுகளுக்கு தலா ரூ.1.50 லட்சம் என 24 படகு உரிமையாளர்களுக்கு மொத்தம் ஒரு கோடியே 13 லட்சம் ரூபாய் நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில்

மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொலை நோக்கு திட்டங்கள் வரும் 13-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் அறிவிக்க உள்ளார். ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி வரும் புதுச்சேரி மாநில மீனவர்கள் பிரச்சினைக்கு புதுச்சேரி முதலமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு எட்டப்படும் என கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன், நாகை.மாலி எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி, மீன்வளத்துறை இணை இயக்குநர், மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Similar News