உள்ளூர் செய்திகள்
சட்டத்திருத்தம்

கடைகள், நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள்

Published On 2022-04-09 16:05 IST   |   Update On 2022-04-09 16:05:00 IST
சிவகங்கையில் கடைகள், நிறுவன பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்து.
சிவகங்கை

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தசட்டத்தின்படி பணியாளர்களுக்கு இருக்கை வசதிகள் ஏற்படுத்துதல் தொடர்பாக சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 

ஒவ்வொரு கடைகள் மற்றும் நிறுவனங்களிலும் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் பணிநேரம் முழுவதிலும் நின்று கொண்டே இருப்பது மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, அவர்கள் பணிபுரியும் இடங்களில் அனைத்து தொழிலாளர்களுக்கும் தகுந்த இருக்கைவசதி செய்து தரப்பட வேண் டும். 

எனவே பணியாளர்களைபணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களிலும் அனைத்து ஊழியர்களுக்கும் தகுந்த இருக்கை வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக இந்த சட்டத்திருத்தத்தினை நடைமுறைப்படுத்து மாறு அனைத்து தொழில் நிறுவன உரிமையாளர் களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த சட்டத்திருத்தத்தினை கடைபிடிக்க தவறும் நிறுவன  உரிமையாளர்கள்மீது மேற்கண்ட சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடை நிறுவன சட்டத்தின்கீழ் பராமரிக்கப்பட வேண்டிய வேலையமைப்பு  பதிவேடு, சம்பளபதிவேடு, விடுப்பு விவரங்கள் பதிவேடு ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து தொழில் நிறுவன உரிமையாளர்களும் முறையாக பின்பற்றவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News