உள்ளூர் செய்திகள்
புதிய அன்னம் மற்றும் பூத வாகனங்களில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்தது.

அன்ன, பூத வாகனங்களில் வீதி உலா வந்த சுவாமி-அம்பாள்

Published On 2022-04-09 15:41 IST   |   Update On 2022-04-09 15:41:00 IST
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் திருவிழாவில் சுவாமி-அம்பாள் வீதி உலா வந்தனர்.

மானாமதுரை

சிவகங்கைமாவட்டம் மானாமதுரை வைகைஆற்றின் கரையில் ஆனந்தவல்லி சோமநாதர், வீர அழகர்கோவில்கள் உள்ளன. 

இங்கு ஆண்டுதோறும் மதுரையில் நடைபெறுவதுபோல் சித்திரைதிருவிழா நடைபெறும். கொரோனா தொற்றால் 2 ஆண்டுகள் சித்திரை திருவிழா பக்தர் களின்றி நடந்தது.

இந்த ஆண்டு இயல்பு நிலை திரும்பியதால் கடந்த 7&ந்தேதி  சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. முதல்நாள் சிம்மம், கைலாசவாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்தது. 2ம் நாளான நேற்று  விழா குழுவினரால் புதிதாக  செய்யப்பட்ட அன்ன பறவை, பூதம் வாக னங்களில் ஆனந்தவல்லி-சோமநாதர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதை காண கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். வருகிற 14ந்தேதி காலை 10 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சியும், 15ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. 

கடந்த 2ஆண்டுகளாக மானாமதுரையில்  சித்திரை திருவிழா நடைபெறாததால்  இந்த ஆண்டு நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள்காண வெளியூர்களில் இருந்து பக்த்தர்கள் வந்து சுவாமிதரிசனம் செய்து செல்கின்ற னர்.

Similar News