உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

பெண் இன்ஸ்பெக்டருக்கு ‘பிடிவாரண்டு’

Published On 2022-04-09 15:37 IST   |   Update On 2022-04-09 15:37:00 IST
வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் புதுபட்டினம் இன்ஸ்பெக்டருக்கு ‘பிடிவாரண்டு’ பிறப்பித்து சீர்காழி நீதிமன்றம் உத்தவிட்டது.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா புதுப்பட்டினம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் பொது இடத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் நிர்வாகியான ரவி என்பவர் மீது புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இந்த வழக்கு விசாரணை சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 2 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் புதுப்பட்டினம் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சந்திரா விசாரணைக்கு ஆஜராக-வில்லை. 

மீண்டும் மீண்டும் அழைத்தும் 3 வாய்தாவிற்கு இன்ஸ்பெக்டர் சந்திரா ஆஜராகாததால் நீதிபதி அலெக்ஸ்ராஜ் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். 

தொடர்ந்து வரும் திங்கட்கிழமைக்குள் இன்ஸ்பெக்டர் ஆஜராகவில்லை என்றால் பிணையில் வெளிவராத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என கூறப்படுகிறது.

Similar News