உள்ளூர் செய்திகள்
தேர்வானவர்களுக்கு மாவட்ட கலெக்டர் லலிதா பணி நியமன ஆணை வழங்கினார்

வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை

Published On 2022-04-09 15:17 IST   |   Update On 2022-04-09 15:17:00 IST
செம்பனார்கோவிலில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை மாவட்ட கலெக்டர் லலிதா வழங்கினார்.
தரங்கம்பாடி

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு கலெக்டர் லலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியார் துறையை சேர்ந்த 51 நிறுவனங்கள் கலந்து கொண்டன. முகாமில் 554 ஆண்கள், 976 பெண்கள் உட்பட மொத்தமாக 1530 வேலைநாடுபவர்கள் கலந்து கொண்டனர். 110 வேலைதேடுபவர்களுக்கு  பணிநியமன ஆணை வழங்கப்பட்டது, 
மீதமுள்ளவர்களுக்கு தகுதிகளின் அடிப்படையில் உரிய பயிற்சிக்குப் பின் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இணை இயக்குநர் கவிதப்பிரியா, தாசில்தார் புனிதா, செம்பனார்கோவில் ஒன்றியக் குழுத் தலைவர் நந்தினி, காளகஸ்தினாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிவள்ளி, துணைத் தலைவர் சரவணன் மற்றும் தனியார் கல்லூரி நிர்வா-கிகள், அரசு அலுவலர்கள் மற்றும் திரளானோர் கலந்துக் கொண்டனர்.

Similar News