உள்ளூர் செய்திகள்
சந்துரு சாமிகள் 108 நாள் அங்கப்பிரதட்சணம்
வில்லியனூர், திருக்காமீஸ்வரர் கோவிலில் 108 நாள் அங்கப்பிரதட்சணம் சந்துரு சாமிகள் தொடங்கினார்.
புதுச்சேரி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் சந்துரு சாமிகள். உலக நன்மை வேண்டி இவர் தொடர் அங்கப்பிரதட்சனம் செய்து வருகிறார். தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள சிவன் கோயில்களில் இவர் 108 நாட்கள் தொடர் அங்கப்பிரதட்சணம் செய்து வருகிறார்.
அவர் வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் அங்கப்பிரதட்சணத்தை தொடங்கினார். திருக்காமீஸ்வரர் கோயில் உள்ள 4 மாடவீதிகளை ஒரு கிலோ மீட்டர் தூரத்தை அவர் அங்கப்பிரதட்சணம் செய்தார்.
108 நாட்களுக்கு அவர் அங்கப்பிரதட்சனம் செய்கிறார். இவர் சிதம்பரம் கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன் தனது நாக்கை காணிக்கையாக கொடுத்தார்.