உள்ளூர் செய்திகள்
பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட்ட காட்சி.

பிம்ஸ் மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் கவுரவிப்பு

Published On 2022-04-09 09:53 IST   |   Update On 2022-04-09 09:57:00 IST
பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் 20 ஆண்டுகள் மருத்துவ கல்வி போதித்த பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
புதுச்சேரி:

கனகசெட்டிகுளம், பிம்ஸ் மருத்துவமனையில் கடந்த 2002-22கல்வி ஆண்டில் சிறப்பாக மருத்துவம் போதித்த பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் நடப்பாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வரவேற்பு விழா கல்லூரி அரங்கில் நடந்தது. பதிவாளர் அனில் பூர்த்தி வரவேற்றார். 

கல்லூரி முதல்வர் ரேணு தலைமை தாங்கி பேசுகையில் ‘பிம்ஸ் மருத்துவமனை கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவ சேவை மற்றும் ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

எதிர்கால மருத்துவர்களாகிய நீங்கள் சமுதாயத்துக்கு முழுமையான சுகாதார சேவை புரிய வேண்டும்’ என்றார். 

பின்னர் பிம்ஸ் மருத்துவ கல்லூரியில் கடந்த 20 ஆண்டுகளாக மருத்துவம் போதித்த பேராசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். 

புதிய மருத்துவ மாணவ-மாணவிகளை சீனியர் மாணவர்கள் வரவேற்றனர். பேராசிரியர் சுபாஷிஸ் தாஸ் நன்றி கூறினார்.

Similar News