உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 3 பேர் கைது
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் சேஷசமுத்திரம் கிராமத்தில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது சாராயம் விற்ற சுப்ரமணியன்(44), நெடுமானூரை சேர்ந்த கண்ணன்(42) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து தலா 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். வடபொன்பரப்பி சப்-இன்ஸ்பெக்டர் சவுகத் அலி மற்றும் போலீசார் பிரம்மகுண்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தனூர் கால்வாய் அருகே சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த துரைசாமி, என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.